☰
×

"விலைவாசி உயர்வுக்கு பதுக்கல்தான் காரணம்" - அமைச்சர் வெங்கடரமணன் விளக்கம்

 

தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாக  மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றச்சாட்டிய நிலையில் இது குறித்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கமளித்தார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், “அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த, தமிழ்நாடு முழுவதும் அமுதம் அங்காடிகள் மூலம் 25,000 மெட்ரிக் டன் அரிசி விற்பனை செய்யப்படும். இன்று முதல் 250  அமுதம் அங்காடிகளில் சன்னரக அரிசி ரூ.30க்கு விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம். சில குறிப்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வியாபாரிகள், உணவுப் பொருட்களை பதுக்குகின்றனர். இதனால் விலைவாசி உயர்ந்துள்ளது. உணவுப் பொருட்கள் பதுக்கலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். என் வாழ்க்கையையே நான் ரேஷன் கடையில்தான் வாழ்ந்திருக்கிறேன். வரிசையில்நின்று எல்லா பொருட்களும் வாங்கித்தான், இன்று அமைச்சராக வந்திருக்கிறேன். ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து அரிசி வரத்து குறைந்ததால் இங்கு விலை ஏறியுள்ளது என்றே கூறினேன். நான் பேசியதை முழுதாகக் கேட்காமல், எனக்கு சவால் விடுகின்றனர்

வெளி மாநிலங்களில் இருந்து வாங்கப்படும் பொன்னி அரிசி வரத்து குறைந்ததால்தான் விலை ஏறியிருக்கிறது. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அரிசி அமுதம் அங்காடியில் 60 ரூபாய்க்குத் கிடைக்கிறது. தற்போது தான் அரிசி, பருப்பு விலை உயர்ந்துள்ளதா..? தி.மு.க ஆட்சியின் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் என்ன விலை இருந்தது தெரியுமா..? ”என பட்டியலிட்டார்.