வேங்கைவயல் சம்பவம் - டிஎன்ஏ பரிசோதனைக்கு மறுத்தவர்களுக்கு மீண்டும் சம்மன்
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்காமலும் அவர்கள் பயன்படுத்தும் நீர்த்தேக்க தொட்டியில் மனித மல்த்தை கலந்து சில விஷமிகள் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்தது கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி தெரியவந்த நிலையில், இது குறித்து வெள்ளனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த விவகாரத்தில் ஒரு நபர் ஆணையம் விசாரணை கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது.