×

வேல்முருகனை எம்.எல்.ஏ. பதவியிலிருந்து நீக்கவேண்டும்- தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடிதம்

 

வேல்முருகனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென சபாநாயகருக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடிதம் எழுதியுள்ளது, 

இதுதொடர்பாக தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், :தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ செல்வங்களை நேரில் சந்தித்து கௌரவப்படுத்தி வருகிறார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மாணவ செல்வங்கள் அவர்களது பெற்றோர்களை கொச்சைப்படுத்தி வேல்முருகன் பேசியிருப்பது. அவர் வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்திவிட்டார். இதுபோன்ற நபர்கள் இனியும் சட்டமன்ற உறுப்பினராக தொடர்வு நீண்டநொடிய பாரம்பரியம் கொண்ட சட்ட பேரவைக்கு கருப்புள்ளியாக அமைந்துவிடும். ஆகவே வேல்முருகனை சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து சபாநாயகர் அப்பாவு அவர்கள் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.