“ஸ்டாலின், உதயநிதி, விஜய் எல்லோருக்குமே ரோடு ஷோவை தடை செய்யணும்”- வேல்முருகன்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சூளகிரியில் தமிழக வாழ்வுரிமை கட்சியில் 2000த்திற்கும் அதிகமானோர் இணையும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
முன்னதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய நிர்வாகி ரவிசங்கர் போதை கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ளார். இதற்கு காரணமான அனைவரையும் கைது செய்ய வேண்டும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற நீதிமன்றத்தை அணுக உள்ளோம். தமிழகத்தில் முதல்வர், எதிர்க் கட்சி தலைவர், விஜய் என எல்லோருக்கும் ரோடு ஷோ முழுமையாக தடை விதிக்க வேண்டும். கரூரில் யாருக்கோ சவால் விட பிற மாவட்டங்களிலிருந்து சென்றவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமான அத்துனை பேரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.. ஏற்கெனவே விஜய் மாநாடுகளுக்கு வந்து உயிரிழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினாரா? , நேற்று பரப்புரைக்கு 8 மணி நேரம் கால தாமதமாக வந்த விஜய், சில நிமிடங்களில் தனி விமானம் மூலம் சென்னை சென்றடைந்தது எப்படி?
கட்சியின் தொண்டன் உயிரிழந்து கிடக்கிறான், ஆனால் அவர் வீட்டிற்கு சென்று விட்டார். இதுப்போன்ற நடிகர்கள் பின் செல்லும் தமிழர்கள் தான் முதல் குற்றவாளிகள். இழந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூட வக்கில்லை, உள்துறை அமைச்சர். முதல்வரை மிரட்டும் வகையில் அறிக்கை கேட்கிறார்.. ஆளுநர் கேட்கிறார்.. சென்னை உயர்நீதிமன்றத்தில், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும். விஜய் அவர்களை களமிறக்கிய பாஜக விஜயை காப்பாற்ற அறிக்கை கேட்கிறார்கள், ஆனால் 40 பேர் உயிரிழப்புக்கு யார் பொறுப்பு ஏற்பது?” வினா எழுப்பினர்.