×

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் வேல்முருகன்? இழுபறியில் கம்யூனிஸ்டுகள்

 

திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க வாய்ப்புள்ளது.


திமுக கூட்டணியில் இடதுசாரி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் ஒதுக்க வேண்டுமென கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் 4 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க இயலும் என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த முறை ஒதுக்கிய 6 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என கம்யூனிஸ்டுகள் பிடிவாதம் பிடித்துவருகின்றன.

இதேபோல் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு ஒரே ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க வாய்ப்புள்ளதாகவும், அந்த ஒரு தொகுதியிலும் உதயசூரியன் சின்னத்திலேயே நிற்க திமுக குழு கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுகவிடம் கூடுதல் இடங்களை வேல்முருகன் கேட்டும் கொடுக்க மறுத்துவிட்டதாகவும், கூடுதல் இடம் கிடைக்காததால் திமுக கூட்டணியிலிருந்து வேல்முருகன் வெளியேறக்கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பின் முடிவை அறிவிக்கிறார் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன்