×

‘பேனர்களில் கடனை செலுத்தாதோர் போட்டோக்கள்’ எல்லை மீறும் எஸ்.பி.ஐ வங்கி: வேல்முருகன் எச்சரிக்கை!

அரக்கோணம் எஸ்பிஐ வங்கியில், வாங்கிய கடனை செலுத்தாத மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் புகைப்படங்கள் பேனரில் போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “அரக்கோணம் எஸ்பிஐ வங்கியில் கடனை செலுத்தாதவர்கள் புகைப்படங்கள் பேனரில் போடப்பட்டதும் அதில் நீங்களும் இடம் பெற வேண்டுமா? என்ற வாசகமும் போடப்பட்டதும் அதிர்ச்சியளிக்கிறது. விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடனை திரும்ப பெறுவதற்கு வங்கிகள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும்
 

அரக்கோணம் எஸ்பிஐ வங்கியில், வாங்கிய கடனை செலுத்தாத மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் புகைப்படங்கள் பேனரில் போடப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “அரக்கோணம் எஸ்பிஐ வங்கியில் கடனை செலுத்தாதவர்கள் புகைப்படங்கள் பேனரில் போடப்பட்டதும் அதில் நீங்களும் இடம் பெற வேண்டுமா? என்ற வாசகமும் போடப்பட்டதும் அதிர்ச்சியளிக்கிறது. விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடனை திரும்ப பெறுவதற்கு வங்கிகள் என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால், அவர்களின் புகைப்படத்தை பேனரில் போடுவது எந்த விதத்தில் நியாயம்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

வங்கி கடனை திரும்ப செலுத்தாமல் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்ட பலர் வெளிநாடு தப்பி சென்றிருக்கையில் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் கடனை செலுத்தாதவர்கள் புகைப்படங்களை பேனர்களில் போட்டு அசிங்கப்படுத்துவது கண்டிக்கத்தக்கது. வங்கியின் முன்பு மாணவர்கள் மற்றும் விவசாயிகளின் புகைப்படங்களை வைத்த வங்கி, விஜய் மல்லையா புகைப்படத்தையோ நிரவ் மோடி புகைப்படத்தையோ வைக்குமா? எனக் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும் அரசு அதிகாரங்கள் இருப்போர் லஞ்சம் வாங்கி சிறைக்கு சென்றால் அவர்களின் பெயர் இடம்பெறும் வகையில் பேனர் வைக்க துணிவு இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ள வேல்முருகன், கடனைத் திரும்ப செலுத்த தேவையான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.