☰
×

வேளாங்கண்ணி சர்ச் 24 மணி நேரமும் திறக்கும் முடிவை நிறுத்தி வைப்பு..!

 

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை சர்ச் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்திருக்கும் என்று சர்ச் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அன்னையின் அருளை பெற வரும் பக்தர்கள் எந்த நேரத்திலும் சர்ச்சிற்கு வந்து இறைவேண்டல் செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, வேளாங்கண்ணி பங்கு மக்கள் மற்றும் பல்வேறு "அமைப்பினர் உள்ளிட்டோர் சர்ச் 24 மணி நேரமும் திறந்திருந்தால் பாதுகாப்பு உள்ளிட்டவைகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படும். இந்த முடிவை கைவிடவேண்டும் என்று வலியுறுத்தினர். இதையடுத்து சர்ச் நிர்வாகம் இன்று (3ம் தேதி) முதல் 24 மணி நேரமும் வழிபாட்டுக்கு திறந்து இருக்கும் என்ற அறிவிப்பு, தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. 

மேலும் வழக்கமாக அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தனி ஜெபத்திற்காக திறந்து வைக்கப்படும். பக்தர்களின் நலன், பாதுகாப்பு, சர்ச் துாய்மை செய்தல் போன்ற காரணங்களை ஆராய்ந்து அதன் பின்னர் முறைப்படி தகவல் அறிவிக்கப்படும் என்று தெரி வித்துள்ளனர்.