×

டெல்லி சிறப்புப் பிரதிநிதி நியமனம்- மறுபரிசீலனை செய்ய இந்திய கம்யூ., வலியுறுத்தல்

 

டெல்லி அரசின் சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணாவை நியமித்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “10 தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணா நியமனம் வாதப் பிரதிவாதத்தை உருவாக்கி விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல், சமூக நிலைகள் பற்றிய புரிதல் இல்லாதவரை நியமித்தது சரியல்ல. வெங்கட் நாராயணாவை நியமித்ததை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.
டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பொருத்தமான நபரை முதல்வர் நியமிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.