×

“NDA கூட்டணிக்கு  தினகரன் மிரட்டி அழைத்து வரப்பட்டுள்ளார்”- கி.வீரமணி

 

தேஜ கூட்டணிக்கு  தினகரன் மிரட்டி அழைத்து வரப்பட்டுள்ளார் தி.க தலைவர் கி.வீரமணி பேட்டியளித்துள்ளார்.

மதுரை லேடி டோக் மகளிர் கல்லூரியில் சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழா (1925-2025) நினைவாக, சென்னை திராவிட வரலாற்று ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து, முதுகலை மற்றும் வரலாற்று ஆராய்ச்சித் துறை, இந்தியாவின் வரலாற்றை சிதைவுகளிலிருந்து மீட்பது குறித்த ஒரு நாள் மாநில அளவிலான மாநாடு நடைபெறுகிறது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி, “கவர்னர் உரையுடன் சட்டமன்றத்தை துவங்க வேண்டும் என்ற வழக்கத்தை மாற்ற வேண்டும் என்பது முதல்வரின் நிலைப்பாடு அல்ல, மக்களின் விருப்பமும் அது தான். பேச வேண்டிய இடத்தில் பேசாமல் வெளியில் வந்து பேசிக் கொண்டிருக்கிறார் ஆளுநர். சட்டசபையில் பேச மாட்டேன் என்பவருக்கு மைக்கை ஆன் செய்தால், ஆப் செய்தால் என்ன? அவர் முதலில் ஆன் ஆக உள்ளாரா? சட்டசபையை சல்லித்தன சபையாக ஆக்கக் கூடாது. தார்மீக முறைப்படி பதவியில் தொடர்வதற்கு தகுதியற்றவர். டிடிவி தினகரன் நேற்று வரை என்னென்னவெல்லாம் பேசினார். எல்லாம் திரிசூலத்தின் மகிமை இது. யார் யார் மீதெல்லாம் வழக்கு இருக்கிறதோ அவர்களை எல்லாம் மிரட்டி கூட்டணியில் சேர்க்கிறார்கள். கூட்டணிக்கு வராவிட்டால் வழக்கு வரும் என பயந்தும் கூட கூட்டணிக்கு வரவைக்கப்படுவார்கள். பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருவதால் எந்த லாபமும் இல்லை. ரோடு ஷோ நடத்துவதால் அவருக்கு நிறைய பூ தூவுவார்கள், அதனால் பூ விற்பனை நன்றாக நடக்கும் அது ஒன்று தான் மோடி வருவதால் நன்மை” எனக் கூறினார்.