அமைச்சராகிறார் விசிக வன்னியரசு?
May 20, 2026, 21:32 IST
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தவெக சார்பில் ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக இடம்பெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சரவையில் இடம் பெற்றால் வன்னியரசு அமைச்சராவார் என்று கூறப்படுகிறது. திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு அமைச்சராக பொறுப்பேற்கவுள்ளார். அதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக அவரை நியமிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியின் 2 அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர். கிள்ளியூர் ராஜேஷ்குமார், மேலூர் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகின்றனர். 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உட்பட 21 எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.