×

“அது நாம் தமிழர் அல்ல, ஓம் தமிழர்”- வன்னி அரசு

 

RSS ன் கிளை அமைப்புகளில் நாதகவும் ஒன்று.அது நாம் தமிழரல்ல; ஓம் தமிழர் என நான் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வன்னி அரசு தனது எக்ஸ் தளத்தில், “RSS ன் கிளை அமைப்பான vigil நடத்திய பாரதியார் விழாவில் நாதக சீமான் பங்கேற்று உளறியிருப்பதை காண முடிந்தது. RSS ன் கிளை அமைப்புகளில் நாதகவும் ஒன்று.அது  நாம் தமிழரல்ல; ஓம் தமிழர் என நான் தொடர்ந்து ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தேன்.பார்ப்பன கடப்பாறையால் திராவிடத்தை இடிப்பேன் என்று சொன்னதன் மூலம், ஆரியத்தின் கூலிப்படையாக சீமான் மாறி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.