☰
×

“நீங்களும் ஒரு குழு அமையுங்க” - திருமாவளவன்

 

கரூர் விவகாரத்தில் பாஜகவின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடி தேவையாகவுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய பாஜக சார்பில் எம் பி ஹேமமாலினி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அந்த குழுவை அமைத்தார். அந்த குழுவினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி இன்று கரூர் வந்த ஹேமா மாலினி தலைமையிலான குழுவினர் கரூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.