×

“ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுத்துள்ள விஜய்க்கு நன்றி”- திருமாவளவன்

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தலைவர் திருமாவளவன் தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய திருமாவளவன், “அமைப்பாய் திரள்வோம் அங்கீகாரம் பெறுவோம் அதிகாரம் வெல்வோம் என்ற முழக்கத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி நீண்ட ஆண்டுகளாக வைத்தது. தேர்தலின் போது விடுதலை சிறுத்தைகள் இடம் பெற்ற மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். ஆட்சியில் அதிகார பகிர்வு கொடுத்துள்ள தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான ஜோசப் விஜய்க்கு நன்றி. விடுதலை சிறுத்தைகளின் கனவு இன்று நனவாகியுள்ளது. ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என முழக்கமிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு  இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி!” என்றார்.