☰
×

“இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மட்டும் தான்”- திருமாவளவன்

 

நாம் ஆதரிக்காமல் போயிருந்தால், தவெகவை வலதுசாரி சக்திகள் ஆக்கிரமிக்கும் சூழல் இருந்தது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற விசிக முப்பெரும் விழாவில் உரையாற்றிய திருமாவளவன், “காலம் யாரும் எதிர்பார்க்காத சில கணக்குகளைப் போடுகிறது... அமைச்சர் பதவிக்காக தவெக கூட்டணியில் இடம்பெறவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் தொடர்ந்து நீடிக்க முடியாத சூழல். திமுக கூட்டணியில் கட்சிகள் வெளியேற காரணம் அவர்களே தான்.. நாம் தவெக அணியில் இடம்பெறாமல் போயிருந்தால், வலதுசாரி சக்திகள் ஆக்கிரமிப்பதற்கான சூழல் இருந்தது. தவெக அதற்குத் தயாராக இல்லை. தவெகவை அப்படி விட்டுவிடக் கூடாது என்ற பொறுப்புணர்வோடு விசிக இந்த முடிவை எடுத்திருக்கிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். இனி தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி மட்டும் தான். நம் கனவு 2026ல் நினைவாகி இருக்கிறது” என்றார்.