தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்- திருமாவளவன்
இனி தமிழக அரசியல் களத்தில் தவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
உளுந்தூர்பேட்டையில் நடைபெற்று வரும் விசிக தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டு மேடையில் நிர்வாகிகள், தொண்டர்கள் அதிகளவில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேடையில் கூட்டம் அதிகரித்து, முண்டியடித்து நின்றதால் திருமாவளவனால் மேடையில் நிற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் வழக்கமாக நீண்ட நேரம் உரையாற்றும் திருமாவளவன், சுமார் 5 நிமிடங்களுக்குள் தனது உரையை முடித்துக்கொண்டார்.
மேடையில் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் தவிர்க்க முடியாத அரசியல் சக்தி விசிக என்பதை மாநாடு உறுதிப்படுத்தியிருக்கிறது. நாம் அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இத்தனை காலம் திமுக, அதிமுக என ஆளும் கட்சிகளுடன் நாம் கூட்டணியில் இருந்தோம். இனி விசிகவும் ஆளும் கட்சியாக மாறும். இன்று ஆளும் முதல்வர் விஜய் உடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி தமிழக அரசியல் களத்தில் தவெக உடன் விசிக இணைந்தே பயணிக்கும். தவெகவின் 100 நாள் ஆட்சி அமைத்து தரப்பினராலும் வரவேற்கத்தக்கதாக உள்ளது”என்றார்.