×

திமுக தேர்தலில் தோற்றது ஏன்?- திருமாவளவன் பரபரப்பு விளக்கம்

 

திமுகவின் தோல்வி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் புதிய கருத்துகளை பேசியுள்ளார்.

கூட்டணிக் கட்சிகள் கேட்டத் தொகுதிகளை திமுக அளிக்கவில்லை என திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார். கூட்டணி ஆட்சி என தேர்தலுக்கு முன்னர் திமுக அறிவிக்கவில்லை எனக் கூறியுள்ள அவர், கூட்டணி ஆட்சி என அறிவித்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவு ஏற்பட்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி அறிவித்திருந்தால் இவ்வளவு வேகமாக கூட்டணி கட்சிகள் விலகியிருக்காது எனவும் திருமாவளன் கூறியுள்ளார்.

கேட்டத் தொகுதி கிடைக்காத காரணத்தால் முறையாக தேர்தல் பணியாற்றவில்லையா? திமுகவினரின் தோல்விக்கு கூட்டணி கட்சிகள் காரணம் என மறைமுகமாக கூற வருகிறாரா?கூட்டணியினர் முழு மனதுடன் பணியாற்றவில்லையா என அடுக்கடுக்கான கேள்விகள் எழுகிறது. விசிகவினர் சிலர் தேர்தலில் முறையாக பணியாற்றவில்லை என ஏற்கனவே திருமாவளவன் கூறியிருந்தார். இந்த சூழலில் அதிருப்தியுடன் திமுக கூட்டணியில் தொடர வேண்டிய நிர்பந்தம் திருமாவிற்கு ஏன் வந்தது? என்ற சந்தேகமும் எழுகிறது.