×

பாஜகவை எதிர்க்க விஜய்க்கு பதற்றம்?- திருமாவளவன்

 

பாஜகவை எதிர்க்க கூடாது என்ற பதற்றம் விஜய்க்கு இருக்கிறது. அதனால் அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் எம்.பி., “SIR வாக்குரிமை மீதான தாக்குதல் அல்ல. குடியுரிமையை குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல். வாக்குரிமையை பறிக்கும் நோக்கில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் கொண்டுவரப்படுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை செய்ய தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. NCR-ஐ நடைமுறைப்படுத்த குடியுரிமையை பறிக்க வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எஸ்.ஐ.ஆர்.நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும். SIR மூலம் தேசிய குடியுரிமை சட்டத்தை மறைமுகமாக கொண்டுவர திட்டமிடுகிறார்கள். தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும்போது SIR பணிகள் மேற்கொள்ளக்கூடாது என சட்டம் உள்ளது. 1 கோடி பேர் பெயர்களை நீக்கி தேர்தலை சீர்குலைக்க  சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

பாஜகவை எதிர்க்க கூடாது என்ற பதற்றம் விஜய்க்கு இருக்கிறது. அதனால் அவர்கள் அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பாஜகவை பகைத்துக் கொள்ள விஜய் விரும்பவில்லை என்றுத் தெரிகிறது” என்றார்.