☰
×

"கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்"- திருமாவளவன் 

 

தவறு நடந்திருப்பது உண்மை என்றால் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், " ஆபாச குறுஞ்செய்தி விவகாரத்தில் தவறு நடந்திருந்தால் எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே எங்கள் பொதுச் செயலரும், அமைச்சரும் பதில் சொல்லியுள்ளனர். தமிழக அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதி கொள்கை நடைமுறைப்படுத்தப்படவில்லை. இட ஒதுக்கீட்டு சமூகங்களுக்கான வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்படவில்லை. அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சமூக நீதியை நடைமுறைபடுத்த வேண்டும்.  245 டாஸ்மாக் ஊழியர்களின் சஸ்பெண்டை திரும்ப பெற வேண்டும்" என்றார்.