“விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்”- திருமாவளவன்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “முதலமைச்சர் விஜய், கர்நாடக முதலமைச்சரை சந்திப்பதில் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார். மேகதாது விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தை காலம் தாழ்த்தாமல் கூட்ட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும். நீட் தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தி.க. பரப்புரைக்கு அனுமதி மறுப்பது ஏன்? நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்தும் வந்தே மாதரம் மசோதாவுக்கு குடியரசு தலைவர் முர்மு ஒப்புதல் தரக்கூடாது. இனியும் கர்நாடகாவை நம்புவதற்கு இடமில்லை. மேகதாது மிகவும் முக்கியமான பிரச்னை என்பதால் காலம் தாழ்த்தாமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும்” என்றார்.“விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்”- திருமாவளவன்