"திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த பாஜக திட்டம்"- திருமாவளவன்
திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த பாஜக,RSS-ன் நீண்டகால திட்டம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “திராவிட கட்சிகளை ஒரே நேரத்தில் பலவீனப்படுத்த பாஜக,RSS-ன் நீண்டகால திட்டம். அதிமுகவை குறிவைத்துதான் அண்ணாமலையும் காய் நகர்த்துகிறார் (அ) நகர்த்தி இருக்கிறார்கள். அதனால்தான் அவர் மேற்கு மாவட்டங்களைக் குறிவைத்து மாநாடுகளை நடத்துகிறார். முதலில் அதிமுகவை பலவீனப்படுத்துவது, பின்னர் திமுகவை தனிமைப்படுத்தி பலவீனப்படுத்துவது என்கிற சூது, சூழ்ச்சி நிறைந்த அரசியல் அரங்கேறி கொண்டிருப்பதாகதான் கருதுகிறேன். இந்த போக்கு தமிழக அரசியல் சூழலுக்கு ஏற்புடையது அல்ல. தவெக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற நிலைப்பாட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்தால் அதனை வரவேற்போம்.தொகுதி மறுவரை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை மீண்டும் கொண்டுவந்தால் எதிர்க்கட்சிகள், தி.மு.க உட்பட கட்சிகள் எதிர்க்கும்.
திமுக, அதிமுக-விற்குப் பிறகு மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் ஒரே இயக்கம் விசிக தான். நமது அடையாளம் சாதியோ, மதமோ அல்ல. நமது மொழிதான் நமது அடையாளம். நான் தமிழனே இல்லை. என் பெயர் திருமாவளவன் இல்லை எனப் பிரசாரம் செய்கிறார்கள். என்னை 'தெலுங்கன்' என விமர்சிப்பதால் தமிழ் தேசியக் கொள்கை மாறாது. சாதி, மத வெறியால் தன்னை யாரும் அசைக்க முடியாது. என்ன ஜாதி பெயரை சொல்லி என்னை அழைத்தாலும் எனக்கு கவலையோ, உடன்பாடோ இல்லை. சாதி வெறியோ, மத வெறியோ என்னை எதுவும் செய்யாது” என்றார்.