×

“எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என விஜயிடம் கூறினேன்”- திருமாவளவன்

 

எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக என கருதுகிறோம், அவரின் குழுவில்தான் கொறடா உள்ளார் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் விஜயுடனான சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக என கருதுகிறோம், அவரின் குழுவில்தான் கொறடா உள்ளார். ஜோதிடத்தை நம்புவது வேறு, மதவாத அரசியலில் ஈடுபடுவது வேறு. எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வேண்டும் என விஜயிடம் கோரினோம். அவரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக விஜய் கூறினார். எனது கடந்த காலம் குறித்து விஜயிடம் பகிர்ந்து கொண்டேன். முதல்வர் விஜயின் அணுகுமுறை தமிழக அரசியலுக்கு புதிது” என்றார்.