×

"குடியரசுத் தலைவர் ஆட்சி வராமல் தடுக்கவே தவெகவுக்கு ஆதரவு" - திருமாவளவன் 

 

ஆளுநரை சந்தித்து விட்டு என்னை சந்திப்பதாக 'விஜய்'  அவர்கள் கூறினார். நான் வேண்டாம் பதவியேற்ற பிற்பாடு சந்தித்துக் கொள்ளலாம் என கூறிவிட்டேன் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “ஆளுநரை சந்தித்து விட்டு என்னை சந்திப்பதாக 'விஜய்'  அவர்கள் கூறினார். நான் வேண்டாம் பதவியேற்ற பிற்பாடு சந்தித்துக் கொள்ளலாம் என கூறிவிட்டேன். நாங்கள் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும்தான் கவனம் செலுத்தியிருக்கிறோம். எங்களால் விஜய் ஆட்சியமைக்க முடியவில்லை என்ற நிலை ஏற்பட்டு விடக் கூடாது. எங்களால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துவிடக் கூடாது. இதனால் வெளியிலிருந்து ஆட்சி அமைக்க உறுதுணையாக இருப்பது என்கிற அளவில் இந்த முடிவை எடுத்துள்ளோம். எந்த நிபந்தனைகளையும் தவெகவிடம் நாங்கள் முன்வைக்கவில்லை. திமுக கூட்டணியில் தொடருகிறோம்.  தவெக அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறோம்” என்றார்.