×

“தயவுசெய்து விசிக வேட்பாளர்களுக்கு வாக்காளிக்காதீர்கள்”- திருமாவளவன் பரபரப்பு

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சின்னத்தில் புதுச்சேரியின் உழவர்கரை தொகுதியில் மட்டுமே வாக்களியுங்கள் என திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “புதுவையில் 3 தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம். புதுவையில் திமுக- காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இழுபறி நீடித்தபோது விசிக தனித்துப்போட்டி. விசிக போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்த 4 தொகுதிகளில் உழவர்கரையை கூட்டணி சார்பில் எங்களுக்கு ஒதுக்கி அறிவித்தனர். ஆகவே உழவர்கரை தொகுதியில் மட்டும் விசிகவுக்கு வாக்களியுங்கள். எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் விசிக வேட்பாளர்களுக்கு வாக்களிக்காமல் கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள். 

டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைமை எங்களை தொடர்புகொண்டு உழவர் கரையில் மட்டும் போட்டியிடுமாறு அறிவுறுத்தினர். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகே கூட்டணியில் உடன்பாடு எட்டப்பட்டது. ஊசுடு, நெட்டப்பாக்கம், ஏனாம் தொகுதிகளில் விசிக வேட்பாளர்கள் பெயர் இருந்தாலும் கூட்டணி கட்சியினருக்குதான் வாக்கு சேகரிப்பார்கள்” என்றார்.