×

அழுத்தத்திற்கு விஜய் அடிபணிந்தால் அவருடைய அரசியல் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும் - திருமாவளவன்

 

அழுத்தத்திற்கு விஜய் அடிபணிந்தால் அவருடைய அரசியல் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கூட்டணிக்குள் இழுக்க அழுத்தம் கொடுத்து விஜயை அடிபணிய வைக்க பாஜக முயற்சி செய்கிறது. அழுத்தத்திற்கு விஜய் அடிபணிந்தால் அவருடைய அரசியல் வாழ்க்கை சூனியம் ஆகிவிடும். எதிர்காலத்தை விஜய் சூனியம் ஆக்கிக்கொள்ள மாட்டார் என்று நம்புகிறேன். 


சமையல் எரிவாயு தட்டுப்பாடு இன்று மிகப்பெரிய நெருக்கடியாக மாறியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த இந்திய ஒன்றிய அரசு உடனடி கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் போரை நிறுத்த மோடி அரசு வலியுறுத்த வேண்டும். ஈரான் அதிபர் கமேனி படுகொலை செய்யப்பட்டதற்கோ அல்லது ஈரான் மீது நடத்தப்படும் ஏவுகணைத் தாக்குதலுக்கோ கண்டனம் தெரிவிக்காத பிரதமர் மோடி, ஈரான் பதிலடி கொடுக்கும்போது மட்டும் அதைக் கண்டிப்பது விந்தையாக இருக்கிறது. பிரதமரின் வெளியுறவுக்கொள்கை தேசத்தின் பாதுகாப்புக்கும், மக்களின் நலனுக்கும் ஏற்புடையதல்ல” என்றார்.