×

“விசிகவை திமுக விழுங்கவில்லை... திமுகவால் விசிகவுக்கு வளர்ச்சிதான்” - திருமாவளவன்

 

திமுக கூட்டணியால்தான் விசிக மெல்ல வளர்ந்து மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “திமுக என்ற கட்சி விசிகவை விழுங்கிவருதாக எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். யாரோ சொல்லிக் கொடுத்து பழனிசாமி பேசுகிறார். பழனிசாமி தானாக இதனை பேசுவதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. சேராத இடங்களில் சேர்ந்திருக்கும் சூழலில் பழனிசாமி இப்படி பேசுவதாக கருதுகிறேன். 2001 ஆம் ஆண்டில் இருந்து ஓரிரு தேர்தல்களை தவிர திமுக கூட்டணியில்தான் விசிக இடம் பெற்றுள்ளது. தற்போது மாநில கட்சியாக வளர்ச்சி அடைந்துள்ளதே தவிர வீழ்ச்சி அடையவில்லை” என்றார்.