×

“திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்போம்”- திருமாவளவன்

 

திமுக கூட்டணயில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஈபிஎஸ் அழைக்கிறார் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார்.

சிதம்பரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, “விசிக மாநாட்டுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி கம்பம் நடவும் அனுமதி தர மறுக்கிறார்கள். இவ்வளவு அசிங்கபட்டு திமுக கூட்டணியில் விசிகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருக்க வேண்டுமா? அதிமுக கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்போம்” எனக் கூறினார்.

எடப்பாடி பழனிசாமியின் அழைப்பு குறித்து கருத்து கூறியுள்ள விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணயில் குழப்பத்தை ஏற்படுத்தவே ஈபிஎஸ் அழைக்கிறார். கூட்டணிக்கு வாருங்கள் என ஈபிஎஸ் சொல்வது அவர் கருத்தாக இல்லை, யாரோ சொல்வதை திருப்பி கூறுகிறார். நிறைவேறாது என தெரிந்தும் திரும்பத்திரும்ப அழைப்பது வேடிக்கையாக உள்ளது. திமுக கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்போம், பாஜகவின் கொள்கைகளை ஏற்க முடியாது. பாஜக கூட்டணிக்கு செல்லமாட்டேன். பாஜகவிற்கு அவர்களது கொள்கை எவ்வளவு முக்கியமோ, அதுபோல் எங்கள் கொள்கை எங்களுக்கு முக்கியம். பாஜகவின் கொள்கைகள் அம்பேத்கரின் கொள்கைகளுக்கு நேர் முரணானது. இந்துத்துவம் வேறு, அம்பேத்கரியம் வேறு, எங்களுக்கு எங்கள் கொள்கை உயிர்மூச்சு, மதசார்பின்மை, சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கு பாஜக நேர் எதிரான கட்சி. பாஜகவில் எனக்கு நண்பர்கள் பலர் உள்ளனர், ஆனால் நட்பு வேறு, உள்வாங்கிய கொள்கைவேறு” என்றார்.