“காங்கிரசின் அணுகுமுறை தவறு”- இண்டியா கூட்டணி கூட்டத்தில் காங்கிரசுக்கு விசிக எதிர்ப்பு
நடந்து முடிந்த தேர்தல்களின்போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டதாக விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
டெல்லியில் I.N.D.I.A கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரசின் செயல்பாடுகள் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் அதிருப்தியை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது. மாநில கட்சிகளின் கரங்களை வலுவிழக்க செய்யும் வேலைகளை காங்கிரஸ் செய்திருக்கிறது எனக் கூறிய திருமாவளவன், காங்கிரசால் தேர்தலில் திமுக பலவீனமடைந்ததாகவும், காங்கிரசின் அணுகுமுறை திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு பலவீனமடைந்ததாகவும் தெரிவித்தார். காங்கிரசின் அணுகுமுறையால் திமுகவின் வெற்றி கூட பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றும் திருமாவளவன் கூறினார். மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனக் கூறிய திருமாவளவன், காங்கிரஸ் தனது அணுகுமுறையை மறுமதிப்பீடு செய்து, இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் மற்றும் ஒருங்கிணைக்கும் வழிகளை ஆராய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் இது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு நன்மை தரக்கூடியது அல்ல என்றும் திருமாவளவன் கூறினார்.