×

"கலைஞரை ஸ்டாலின் பராமரித்தார் என்பது உலகுக்கே தெரியும்"- திருமாவளவன்

 

கூட்டணி வெற்றியை பாதிக்கக்கூடாது என்பதற்காகதான் போட்டியிலிருந்து விலகினேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் புதுச்சேரியில் தெரிவித்தார். 

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், நாடாளுமன்றத்தில் வருடத்துக்கு மூன்று முறை பாராளுமன்றம் கூடுகிறது. ஓரிரு முறை 5 நிமிடங்கள் மட்டுமே பேச வாய்ப்பு கிடைக்கிறது. நோக்கத்துடன் செயல்படமுடியாத சூழல் உள்ளது. சட்டமன்றத்தில் இருந்தால் விளிம்புநிலை மக்களுக்கு பேச முடியும் என்பதால் முடிவு எடுத்தேன். கூட்டணி நலனுக்கு பாதிக்கும் வகையில் திட்டமிட்ட வதந்திகளை பலரும் பரப்பியது என்னை மறுபரிசீலனை செய்ய வைத்தது. கூட்டணி வெற்றியை சந்தேகிப்பதாக தோற்றம் ஏற்பட்டது, கூட்டணியை பாதிக்கக்கூடாது என்று நினைத்தேன். கூட்டணியை கட்டுகோப்பாக வைத்தில் விசிகவும் பங்கு உண்டு. அதை சிதறடிக்க பலரும் முயற்சித்தனர். கூட்டணி வெற்றியை நமது நிலைப்பாடு எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்று போட்டியிடக்கூடாது என்று முடிவு எடுத்துள்ளேன்.

திமுக அழுத்தத்தால்தான் போட்டியிலிருந்து திருமாவளவன் விலகியதாக அன்புமணி கூறியுள்ளது அதீத கற்பனை. திமுகவுக்கு ஆதரவானோருக்கு போட்டியிட வாய்ப்பு தரவில்லை, அதன் மூலம் திமுக அழுத்தத்துக்கு கனிய மாட்டார் என்ற பொருள் உள்ளது. அப்படியிருக்க திமுக அழுத்தத்தால் எப்படி பணிமுடியும்? அரசியலுக்காக பேசுகிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு தரவே பழையவர்களுக்கு தரவில்லை. இடதுசாரிகளில் 3 முறைக்கு மேல் வாய்ப்பில்லை என்ற வரைமுறை. நாங்கள் அப்படி வரையறை உருவாக்கவில்லை என்றாலும் புதியவர்களுக்கு வாய்ப்பு தரும் சமூக நீதி அடிப்படையில் புதிய முறையை கையாண்டேன். எப்போதும் விசிகவை குறிவைத்து கூட்டணிக்கு குழப்பத்தை ஏற்படுத்துவது எதிர்க்கட்சி நோக்கம் எடுபடாது. வதந்திக்கு இரையாக மாட்டேன். மாநில அளவில் மதசார்ப்பற்ற கூட்டணிதான். அது இண்டியா கூட்டணியில் உள்ளது. கலைஞர் காலத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி உருவாகியது. இக்கூட்டணி கட்சிகள் அனைத்தும் இண்டியா கூட்டணியில்தான் உள்ளது.

தேர்தல் உடன்பாட்டை புதுச்சேரியில் விசிக கடைபிடிக்கிறது. அதேபோல் உழவர்கரையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கிவிட்டாலும் அவ்வேட்பாளர் காங்கிரஸ் சின்னத்துடன் வாக்கு சேகரிப்பதை காங்கிரஸ் தடுக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் தமிழக ஆளுநர் பாஜக, ஆர்எஸ்எஸ் நிகழ்வுகளில் பங்கேற்பதுடன் தலைவர்களை அழைத்து பேசுவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. தலைமை தேர்தல் அதிகாரிக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் புகார் அனுப்பியுள்ளேன். கலைஞரை ஸ்டாலின் பராமரித்தார் என்பது உலகுக்கே தெரியும். கொச்சைப்படுத்துவதாக எண்ணி கலைஞரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசுவது தர்மம் இல்லை. அநாகரிமானது. அரசியல் அறமற்ற செயல். பாஜக தேர்தல் அறிக்கையில் அரசு சின்னத்தை மாற்றுவதாக சொல்வது ஏற்புடையதல்ல. மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சகோதரத்துவத்தை சிதைக்க பார்க்கிறார்கள். மதவாத அரசியலை உயர்த்தி பிடிப்பது போல் இவ்வாகுறுதி அமைந்துள்ளது. மக்களை கவர பல வாக்குறுதி பாஜக தந்துள்ளது. சித்து வேலைகள் செய்தாலும் தமிழகம், புதுச்சேரியிலும் மதவாத அரசியலுக்கு இடமில்லை என்பதை மக்கள் உறுதி படுத்துவார்கள். தமிழகம், புதுச்சேரியிலும் தோல்வி தழுவார்கள். தமிழகத்தில் குழப்பம் இல்லை. புதுச்சேரியில் பேச்சுவார்த்தையில் தாமதம் நிகழ்ந்து குழப்பம் ஏற்பட்டு தற்போது சரி செய்யப்பட்டவிட்டது. காங்கிரஸ் கை சின்னத்துக்கு வாக்கு கேட்க மாடடார்கள் கரும் பலகைக்குதான் வாக்கு கேட்பார்கள்” என்றார்.