×

டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது - திருமாவளவன்

 

முதலமைச்சர் தனது நண்பருக்கு அந்த பதவியை வழங்க அவருக்கு அதிகாரம் உள்ளது என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்


திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு அரசின் டெல்லிப் பிரதிநிதியாக படத் தயாரிப்பாளர் வெங்கட நாராயணா நியமித்தது தவெகவின் உட்கட்சி விவகாரம். அரசு பதவிதான் என்றாலும் கூட அவரை நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளது. டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது.  மதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் விஜய் ராஜினாமா செய்ய சொன்னார் என வைகோ கூறியிருப்பதற்கு நான் பதில் அளிக்க முடியாது. கூட்டணி இல்லாமல் தி.மு.க.வால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தான் தி.மு.க. 60 இடங்களில் வென்றது. கூட்டணி இல்லாமல் எதிர்காலத்தில் ஆட்சியை நிலைநிறுத்துவது என்பது கடினம்” என்றார்.