“இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல”- திருமாவளவன்
Sep 9, 2026, 20:01 IST
இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி என விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தவெக தோழமைக் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “இதுவரை ஆதரவு கட்சிகளாக இருந்த நாங்கள் இன்று முதல் கூட்டணிக் கட்சிகளாக வலுப்பெற்றுள்ளோம். மதச்சார்பின்மையும், சமூகநீதியும் இந்த கூட்டணியின் முதன்மையான குறிக்கோள்கள். மதவாத, சாதிவாத சக்திகளுக்கு இந்த மண்ணில் இடமில்லை. மதச்சார்பின்மையை அகில இந்திய அளவில் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது. இது வெறும் தேர்தல் கூட்டணி அல்ல, அரசியலமைப்பை பாதுகாக்கும் கூட்டணி, ஒருமித்த கருத்தோடு த.வெ.க கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.