×

#BREAKING தவெகவுக்கு விசிகவும் ஆதரவு

 

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, விசிகவும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

சட்டமன்ற தேர்தலில் தவெக 107 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திருச்சி மற்றும் பெரம்பூர் ஆகிய 2 இடங்களில் விஜய் வெற்றி பெற்றார். காங்கிரஸ் 5 இடங்களில் வென்ற நிலையில், காங்கிரஸ் ஆதரவு அளித்ததை தொடர்ந்து தவெகவின் பலம் 113 ஆனது. இதனை தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் (4) மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (2)வின் ஆதரவு கிடைத்துள்ளதை அடுத்து, ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்களை விஜய் அவர்கள் எட்டியுள்ளார்.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது. ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்த நிலையில், விசிகவின் ஆதரவு விஜய்க்கு மிக முக்கிய அரசியல் பலமாக பார்க்கப்படுகிறது. இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 120ஆக அதிகரித்துள்ளது.