ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்து விசிகவினர் ஆர்ப்பாட்டம்
திருத்தணியில் ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் வெற்றிக்கழகம் சார்பில் நேற்று செயல் வீரர்கள் கூட்டம் நடை பெற்றது. அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை திமுகவினர் அடியாட்களாக பயன்படுத்துவதாகவும், அதேபோல் விசிக கட்சியில் இருந்த தொண்டர்கள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர்ந்து விட்டதாகவும் இப்போது அந்த கட்சியில் வெறும் 20 பேர் மட்டுமே இருப்பதாக விமர்சித்தார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தொகுதி மாவட்ட செயலாளர் தண்டபாணி தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சியினர் காசிநாதபுரம் கூட்டுச்சாலையில் அம்பேத்கர் சிலைக்கு முன்பு மேளம் அடித்துக் கொண்டு ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்து கண்டன கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆதவ் அர்ஜுனா உருவ பொம்மையை எரித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.