தவெக அமைச்சரவையில் இணைகிறது விசிக; எம்.எல்.ஏ வன்னி அரசு புதிய அமைச்சர்!
தமிழக சட்டபேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவானபோதும் ஆட்சிமையக்க போதிய பெரும்பான்மை கிடைக்காத நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆதரவுடன் ஆட்சியமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் மே 10-ஆம் தேதி தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது அவருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமலேயே இருந்துவந்த நிலையில், நேற்று மொத்தம் 23 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர்.
இந்தசூழலில் சிறுபான்மையினர் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என 2 இலாகாக்களுக்கு அமைச்சர் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளும் தவெக அமைச்சரவையில் இடம்பெறும் என சொல்லப்பட்டது.இந்நிலையில் தான் தவெக அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான ஒப்புதல் கடிதத்தை முஸ்லிம் லீக் கட்சி முதல்வர் விஜயை நேரில் சந்தித்து ஒப்படைத்தது.
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகிறார். எங்களுடைய உயரநிலைக்குழு கூட்டத்தில் பெரும்பாலனவர்கள் அமைச்சரவையில் இடம்பெறவேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார்கள். இப்போதைக்கு அமைச்சரவையில் இடம்பெறுகிறோம் என்ற அறிவிப்பை மட்டும் வெளியிடுகிறோம். திமுக கூட்டணியில் இடம்பெறுகிறோமா இல்லையா என்பதை பின்னர் அறிவிக்கிறோம்” என்று பேசியுள்ளார்.