×

விசிக நிர்வாகி வெட்டிக் கொலை! சென்னையில் பட்டப்பகலில் அரங்கேறிய கொடுமை

 

திருநீர்மலையைச் சேர்ந்த விசிக தொண்டரணி அமைப்பாளர் ஆறுமுகத்தை பல்லாவரத்தில் சூழ்ந்து வெட்டிக் கொன்ற மர்மக் கும்பலின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அருகே தாம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர் அணி அமைப்பாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது மூன்று கொலை வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. ஆள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டோவில் வந்த 10 பேர் கொண்ட மர்மகும்பல் அன்பழகனை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. விசிஅக மாவட்ட தொண்டரணிதுணை அமைப்பாளர் பதவி வகித்துவந்தவர் அன்பழகன்.  நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அன்பழகனை கும்பல் வெட்டி சாய்த்தது. முன்விரோதம் காரணமாக இந்த படுகொலை நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.