×

வன்னியர்கள் உள் இடஒதுக்கீட்டுக்கு தடை கோரிய வழக்கு: முதன்மை அமர்வுக்கு மாற்றம்!

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு வன்னியர் சமூக மக்கள் வரவேற்பு தெரிவித்தாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற சமூகத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் இடஒதுக்கீடு உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சப்படுகின்றன. அதனைத் தெளிவுப்படுத்த நீதிமன்றத்தை நாடுகின்றனர். முதலாவதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்குத் தடைவிதிக்க
 

வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு வழங்கி தமிழக அரசால் சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு வன்னியர் சமூக மக்கள் வரவேற்பு தெரிவித்தாலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் இருக்கும் மற்ற சமூகத்தினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தங்களின் இடஒதுக்கீடு உரிமை பறிபோய் விடுமோ என்ற அச்சப்படுகின்றன. அதனைத் தெளிவுப்படுத்த நீதிமன்றத்தை நாடுகின்றனர்.

முதலாவதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் முதன்மை அமர்வில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம் வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்குத் தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. அதேபோல இச்சட்டத்துக்குத் தடை கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையிலும் சின்னாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின் அந்த எண்ணிக்கையின்படி இடஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரித்த மதுரைக் கிளை நீதிமன்றம், ஏற்கெனவே இதே கோரிக்கையிலான வழக்கு முதன்மை அமர்வான சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருப்பதால் அங்கு மாற்றி உத்தரவிட்டது.