☰
×

"இதெல்லாம் வேற யார் கிட்டயாவது வச்சிக்கொங்க"- கடுங்கோபத்தில் வன்னி அரசு 

 

முதுமலை வனப்பகுதிக்கு அனுமதி வாங்கிவிட்டு தான் சென்றேன் என அமைச்சர்  வன்னி அரசு கூறியுள்ளார். 

தன் மீதான வனச்சுற்றுலா விமர்சனம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு   விளக்கம் அளித்த அமைச்சர் வன்னிஅரசு, "15 ஆண்டுகளுக்கு மேலாக என் கால்படாத காடுகளே இல்லை.மலையேற்றம் எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தின் எல்லா காடுகளுக்கும் சென்றிருக்கிறேன். தீபாவளிக்கு நான் வீடுகளில் இருப்பதில்லை, காடுகளில் தான் இருப்பேன். என்னால் எந்த விலங்குகளுக்கும் தீங்கு ஏற்படாது. நான் மக்களை மட்டும் நேசிப்பவன் அல்ல, விலங்குகளையும், காடுகளையும், கடலையும் நேசிப்பவன். முறையாக அனுமதி பெற்று தான் முதுமலை வனப்பகுதிக்கு சென்றேன். கடந்த ஆட்சியில் என் முயற்சியால்தான் TNTrekking உருவானது.  நான் சட்டத்தை மதிப்பவன். விதிகளை மீறி நான் வனத்திற்குள் செல்லவில்லை. என்னை விமர்சித்து டிராமா போடுபவர்கள், அதை வேறு யாரிடமாவது வைத்து கொள்ள வேண்டும்" என்றார்.