×

தவெக முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்; ரசிகர்களை அல்ல - வன்னி அரசு

 

தவெக முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும்; ரசிகர்களை அல்ல என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு கூறியுள்ளார்.

தவெக முதலில் தொண்டர்களை உருவாக்க வேண்டும், ரசிகர்களை அல்ல என விடுதலைச்சிறுத்தைகள் கட்சி துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு, “தவெக சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைப்பெற்ற போராட்டத்தில் தடுப்புச்சுவர் உள்ளிட்ட அரசாங்க சொத்துக்களை சேதப்படுத்தியதாக ஒப்புக்கொண்டு சரி செய்து தருவதாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. நடிகர் பின்னால் திரளும் விசிலடிச்சான் குஞ்சுகளின் செயல்பாடு இப்படித்தான் இருக்கும் என்பதையே இது உறுதிப்படுத்தியுள்ளது. அரை மணி நேரத்தில் முடிந்த போராட்டத்தில் ஐந்தாயிரத்திற்குள்ளானோர் தான் பங்கெடுத்திருப்பார்கள். ஆனால், விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் திருச்சியில் கடந்த சூன் 14 அன்று #மதச்சார்பின்மை_காப்போம்_பேரணி நடைப்பெற்றது.