"கண்டிப்பா ஒரு மிகப்பெரிய வெற்றி அடையனும்" - விஜய்க்கு வனிதா விஜயகுமார் வாழ்த்து!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பயணத்தில் வெற்றி அடைய வேண்டும் என வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வரும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் கட்சியின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை அறிவித்தார். அதில் முக்கிய அறிவிப்பாக பார்க்கப்படுவது கூட்டணி நிலைபாடு. அதாவது தனது கட்சியுடன் வருகிற 2026ம் ஆண்டு கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என அறிவித்தார். இதேபோல் திராவிடமும், தமிழ்தேசியமும் ஒன்றுதான் என அறிவித்தார். தவெக தலைவர் விஜயின் இந்த அறிவிப்புக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதேபோல் பலரும், விஜயின் கொள்கைக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் பயணத்தில் வெற்றி அடைய வேண்டும் என வனிதா விஜயகுமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நடிகர் விஜய் அரசியல் எனும் பெரிய பரிமாணத்தை எடுத்துள்ளார். நல்ல தமிழகம் அமைய யார் வந்தாலும் ஆதரிப்போம். அரசியல் பயணத்தில் விஜய் வெற்றி அடைய வாழ்த்துக்கள். கண்டிப்பா ஒரு மிகப்பெரிய வெற்றி அடையனும் என கூறினார்.