×

"ஒரு சிங்கம் போல் முதல்வர் விஜய் நிற்கிறார்"- வனிதா விஜயகுமார் பேச்சு

 

இன்னைக்கு ஒரு சிங்கம் மாதிரி முதல்வர் விஜய் நிக்கிறாரு.. அவர் தமிழகத்தின் மிகப்பெரிய சொத்து நடிகை வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், "விஜய் முதல்வரானது ரொம்ப பெருமையா இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. நம் அனைவரும் நம்பிதான் இந்த ஆட்சியை கொண்டுவந்திருக்கிறோம். அந்த நம்பிக்கையை அவர் காப்பாற்றுவார். சொகுசு வாழ்க்கையை விட்டுட்டு வந்திருக்கார். குறை சொல்லிட்டே இருந்தா நாடு முன்னேறாது. இன்று ஒரு சிங்கம் போல் முதல்வர் விஜய் நிற்கிறார். அவர் தமிழகத்தின் மிகப்பெரிய சொத்து, தமிழக முதல்வராக இன்னும் நிறைய பணிகளை அவர் செய்ய வேண்டியுள்ளது. படத்தை ஆரம்பிப்பது முக்கியமல்ல, அதனை முடிப்பது மிகப்பெரிய விஷயம். அதனை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.