கேரள சட்டப்பேரவையில் ‘வந்தே மாதரம்’ பாடல் பாதியிலேயே நிறுத்தம்
காங்கிரஸ் கட்சியின் சதீசன் முதலமைச்சரான பின்பு கூடிய கேரள சட்டப்பேரவை கூட்டத்தின் முதல் நாளில் இசைக்கப்பட்ட வந்தே மாதரம் பாடல் பாதி மட்டுமே இசைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடரின் முதல் நாளில், தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' பாதியிலேயே நிறுத்தப்பட்ட விவகாரம் மற்றும் அது தொடர்பாக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் மற்றும் முதலமைச்சர் வி.டி. சதீசன் ஆகியோருக்கு இடையே வெடித்துள்ள புதிய புரோட்டோகால் சர்ச்சை எழுந்துள்ளது.
கேரள சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடர் இன்று ஆளுநரின் உரையுடன் தொடங்கியது. அப்போது, அவையில் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' முழுமையாகப் பாடப்படாமல், காவல்துறை இசைக்குழுவால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகக் கூறி ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தனது கடுமையான அதிருப்தியைப் பதிவு செய்துள்ளார். ஆனால், இதற்குப் பதிலடி கொடுத்துள்ள புதிய முதலமைச்சர் வி.டி. சதீசன், "வந்தே மாதரத்தை முழுமையாகப் பாடுவது கட்டாயமில்லை" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கேரள சட்ட சபையில் வந்தே மாதரம் ..@tncpim
— Sathish Sankar (@iam_satheesan) May 29, 2026
ஏதாவது கருத்து உண்டா pic.twitter.com/j0C3TpZS92
நம்ம முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு , தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை கேட்க கூட பிரதமரிடம் கோரிக்கை வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.