×

இனி வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்லும்

 

எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே கடந்த ஆண்டு செப்., மாதம் முதல் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில், முன்பதிவு 130 சதவீதமாக இருக்கிறது. பயணியர் எண்ணிக்கை நாளுக்குள் அதிகரித்து வருவதால், கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, எழும்பூர் – நாகர்கோவில் வரை இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல், திருநெல்வேலி வரை செல்லும் வந்தே பாரத் ரயிலும் கோவில்பட்டியில் நிறுத்த வழங்க வேண்டும் என பயணியர் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஆய்வு செய்த ரயில்வே வாரியம், எழும்பூர் – திருநெல்வே வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்று செல்ல ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கான, அறிவிப்பை தெற்கு ரயில்வே விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.