×

”அது கால கொடுமை... அண்ணாமலை சட்டப்பேரவைக்குள் செல்ல வேண்டும் என்பது எங்கள் விருப்பம்” - வானதி சீனிவாசன்

 

அண்ணாமலை தொகுதி சுற்றுப்பயணத்தை மட்டுமே மாற்றி வழங்க கேட்டுள்ளார், சட்டமன்றத்தில் நுழைய வேண்டும் என்பது எங்களது விருப்பம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணப்பநகர் பகுதியில் பாஜக சார்பில் மோடி முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மேலிட பொருப்பாளர் சுதாகர் ரெட்டி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணிகளை துவங்கியுள்ளோம். ங்கள் குரல் எங்கள் செயல் என்ற செயலியை அறிமுகபடுத்தியுள்ளோம். இதனை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்ல முயற்சி செய்வதாக தமிழக பொருப்பாளர் தெரிவித்துள்ளார்.  மேலும் மோடி முகாம் மூலம் இலவச உடல் பரிசோதனை ஒன்றிய அரசின் முதியோர் காப்பீட்டு அட்டைகளை வழங்கினோம். எங்களை கண்டதும் இப்பகுதி மக்கள் சாலை, தண்ணீர், தெருவிளக்கும் பிரச்சனைகளை எங்களிடம் கூறுகின்றனர். கோவை வளர்ச்சி பெற்ற மாவட்டம் ஆனால் மாநகரில் மக்கள் இவ்வளவு பிரச்சனைகளோடு வருகிறார்கள் என்றால் திராவிடல் மாடல் அரசு தோல்வி அடைந்த மாடல் என நிரூபனம் ஆகியுள்ளது. 

வடக்கு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை அறிவிக்கும். அதே போல தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க இதே போல ஆயிரக்கணக்கான முகாம்களை பாஜக நடத்த தயாராக இருக்கிறது.  திமுக தேர்தல் அறிக்கை போல அதிமுக தேர்தல் அறிக்கை உள்ளது என்கிறீர்கள் ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அம்மா ஆட்சியில் என்னனென்ன திட்டங்கள் அமல்படுத்தப்பட்டதோ, அதன் தொடர்ச்சியை தான் சிறிது திமுக செயல்படுத்தியது. மேலும் இரு சக்கர வாகனம் திட்டம், தாளிக்கு தங்கம், லேப்டாப் திட்டங்களை நிறுத்தி விட்டு மீண்டும் புதிதாக செய்தது போல நாடகம் நடத்தினார்கள். அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன வாக்குறுதி கொடுக்கப்பட்டதோ, அதை நிறைவேற்ற மத்தியில் உள்ள பிரமதர் மோடி அரசு முழுமையாக துணை நிற்கும். நாடாளுமன்றத்தில் பேசிய கமலஹாசன் பேச்சு எனக்கு புரியவில்லை. கோவை மக்களுக்கு அவரது பேச்சு புரியாததால் தான் வெளியே அனுப்பினார்கள். அஜித்குமார் லாகப் மரணத்திற்கு தமிழக அரசு சரியான நீதி வழங்க வேண்டும். அண்ணாமலை தந்தையாரின் உடல் நலம் இல்லாததால் தொகுதியின் சுற்றுப்பயணத்தை மாற்றிக் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். மேலும் அண்ணாமலை சட்டமன்றத்திற்கு நுழைய வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பம். ஆனால் எங்கு போட்டியிடுவார் என முடிவு செய்யும் அதிகாரம் டெல்லியிடம் உள்ளது. எனது விருப்பத்தை நான் கூறியுள்ளேன். செங்கோட்டையன் முதிர்ந்த அரசியல் வாதி காலத்தின் கொடுமை காரணமாக புதிதாக கட்சி ஆரம்பித்துள்ள நடிகரோடு நிற்கிறார் என்றால் எங்களுக்கு வேதனையாக உள்ளது. இப்போது அதிமுகவில் உள்ள அனைவரும் இணைந்திருக்கிறார்கள் கூட்டணி பலமானதாக மாறிக் கொண்டிருக்கிறது” என்றார்.