வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்! உலியம்பாளையத்தில் தாயார் வீட்டில் உற்சாக வரவேற்பு..!
கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி, உடல்நலக்குறைவால் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார். வலது காலில் ஏற்பட்ட தொற்றுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் இருந்த போதும் அவ்வப்போது அவர் வீடியோ வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் வானதி சீனிவாசன், குடும்பத்தினர் தேர்தல் களத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
வானதி சீனிவாசனின் கணவர் சீனிவாசன், தொகுதியில் உள்ள பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நேரில் சென்று, கடந்த ஐந்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மக்கள் பணிகளை விளக்கி தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
அதேபோல், வானதி சீனிவாசனின் மகன்களான ஆதர்ஷ் மற்றும் கைலாஷ் ஆகியோர் இளைஞர்களுடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வானதி சீனிவாசன் விரைவில் குணமாகி மக்கள் பணியை தொடர்வார் என அவரது குடும்பத்தினர் தொகுதி மக்களிடம் உறுதி அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் தீவிர சிகிசைக்கு பின் உடல் நலம் தேறிய வானதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தொண்டாமுத்தூர் அருகே உலியம்பாளையத்தில் உள்ள தாயார் வீட்டுக்கு வானதி சென்றார். அவருக்கு அங்கு ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.