×

பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பிடத்தில் இருக்க வேண்டும் - வானதி சீனிவாசன்

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பிடத்தில் இருக்க வேண்டும் என தமிழக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலின் தாக்கதினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பிடத்தில் இருக்க வேண்டும்.