சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் - வானதி சீனிவாசன் புகழாரம்!
Jan 12, 2024, 11:38 IST
சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளில் இளைஞர்கள் நம் பாரத தேசத்தை வல்லரசாக கட்டமைக்க உறுதி ஏற்போம் என பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் இருண்டு கிடந்த பாரதத்திற்குக், கலங்கரை விளக்கமாக வெளிச்சம் தந்த வீரத் துறவி சுவாமி விவேகானந்தர் அவர்கள் பிறந்த தினம் இன்று. இன்றைய தினம், நாடு முழுவதும் தேசிய இளைஞர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி தலைவர்கள் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.