×

மருத்துவமனைக்கு இலவச அமரர் ஊர்திகளை வழங்கிய வானதி சீனிவாசன்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடின்றி களமிறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன் படி, எம்எல்ஏக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கொரோனா நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார். சென்னையை அடுத்து பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டம்
 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அந்தந்த தொகுதி எம்எல்ஏக்கள் கட்சி பாகுபாடின்றி களமிறங்கி மக்களுக்கு உதவ வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். அதன் படி, எம்எல்ஏக்கள் அனைவரும் அந்தந்த தொகுதிகளில் கொரோனா நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன் கொரோனா நோய் தடுப்பு பணிகளை தீவிரமாக கண்காணித்து வருகிறார்.

சென்னையை அடுத்து பாதிப்பு அதிகமாக இருக்கும் மாவட்டம் கோவை தான். அங்கு நிலைமை மிக மோசமாகிக் கொண்டே செல்வதால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கட்சியினர் மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது, நிவாரணம் வழங்குவது போன்ற பல உதவிகளை செய்து வரும் நிலையில், வானதி ஸ்ரீனிவாசன் பாஜக சார்பில் நடமாடும் நீராவி வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 2 இலவச அமரர் ஊர்தி வாகனங்களை வழங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.