×

தமிழ்நாட்டைச் சேர்ந்த இருவருக்கு தேசிய நல்லாசிரியர் விருது - வானதி சீனிவாசன் வாழ்த்து

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கான நல்லாசிரியர் விருதினை மத்திய அரசு வழங்கி வருகிறது.  அந்த வகையில் 50 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தமிழகத்தை சேர்ந்த இரண்டு அரசு பள்ளி ஆசிரியர்கள் இதில் இடம் பெற்றுள்ளனர்.  

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார்,  தென்காசி மாவட்டம் வீரகேரளம்புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ். மாலதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர்  வாழ்த்து கூறியுள்ளனர்.