தூத்துக்குடி அருகே வேன் - பைக் நேருக்கு நேர் மோதல்! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!
Feb 16, 2026, 04:50 IST
தூத்துக்குடி அருகே உள்ள பல்லாகுளம் கிராமத்தில் சேர்ந்த குருசாமி(40), முத்துலட்சுமி (48), சுமித்ரன் (3), முகில் (5) மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் ஆகியோர் பைக்கில் குளத்தூரில் இருந்து பல்லாவரம் கிராமத்திற்குசென்று கொண்டிருந்தனர்.
அப்போது கிழக்கு கடற்கரை சாலையில், சாயல்குடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த சுற்றுலா வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைக்கில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.உயிரிழந்த ஐந்து பேரின் உடலை மீட்ட குளத்தூர் போலீசார் பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வேன் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.