×

வள்ளலார் முப்பெரும் விழா நடத்த சிறப்புக்குழு அமைத்து அரசாணை வெளியீடு!!

 

முதலமைச்சர் ஸ்டாலின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் வள்ளல் பெருமானாரின் 200-வது அவதார ஆண்டை முன்னிட்டு முப்பெரும் விழாவினை சிறப்பாக நடத்திட அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சந்தித்துப் பேசினார். 

இந்நிலையில்  தமிழக அரசு சார்பில் வெளியாகியுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசலினை செய்து அதனை ஏற்று, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பினை செயல்படுத்திட ஏதுவாக, வள்ளல் பெருமானார் தருமசாலை துவக்கிய 156-வது ஆண்டு தொடக்கமும், வள்ளல் பெருமான் இவ்வுலகிற்கு வருவிக்க உற்ற 200-வது ஆண்டு தொடக்கமும் மற்றும் ஜோதி தரிசனம் காட்டுவித்த 152-வது ஆண்டும் வரவிருப்பதையொட்டி இம்மூன்று நிகழ்வுகளையும் இணைத்து அவரது 200-வது அவதார ஆண்டான அக்டோபர் 2022 முதல் அக்டோபர் 2023 வரை, 52 வாரங்களுக்கு முக்கிய நகரங்களில் முப்பெரும் விழாவினை நடத்திடவும் அவ்விழாவினை சிறப்புற நடத்திடுவதற்கான செயல் திட்டங்களை வகுத்திட கீழ்க்காணும் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக்குழு ஒன்றினை அமைத்திடவும் அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  சிறப்புக்குழு உறுப்பினர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

டாக்டர்.பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் - தலைவர் 

இணை ஆணையர், கடலூர் - செயலர் 

 உதவி ஆணையர், கடலூர் - கூட்ட  ஒருங்கிணைப்பாளர் 

திருமதி. சாரதா நம்பி ஆரூரன் 

திரு. அருள்நந்தி சிவம்

 திரு. கே.என். உமாபதி

திரு. உமாபதி (வள்ளலார் பேரன்) 

திருமதி. தேசமங்கையர்க்கரசி

திரு. மெய்யப்பன்

முனைவர். உலகநாயகி 
 
டாக்டர். சக்திவேல் முருகனார் 

திரு. A.B.J அருள் என்றஎன். இளங்கோ 

திரு. எம்.கலைச்செல்வன் 

திரு. ஜி. சந்திரகாசு