காதலர் தின ஆஃபர் 1 ஒயின் வாங்கினால் 4 பீர் இலவசம்!
புதுச்சேரியில் காதலர் தினத்தையொட்டி மது பிரியர்களுக்காக மும்தாஜ் ஒயின் வாங்கினால், ஸ்ட்ராங் பீர் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவசம் துணிக்கடை, இனிப்புக்கடை என பல கடைகளில் பார்த்திருப்போம். ஆனால் மதுக்கடையில் அதுபோல் ஆபர் புதுச்சேரியில் தான் தருவார்கள். அதுவும் காதலர் தினத்தையொட்டி புது ஆபரை புதுச்சேரி ராஜராஜன் ஒயின்ஸ் தருகிறது. அதாவது ஒயின் வாங்கினால் பீர் இலவசம். ஏன் இந்த ஆபர் என ஒயின்ஸ் உரிமையாளர் கணேஷ் கூறுகையில், நாங்கள் எப்போதும் அடக்க விலைக்கு தான் மது வகைகளை விற்போம். காதலர்தினத்தையொட்டி புது விதமான காம்போ ஆபர் தர திட்டமிட்டோம். உலகளவில் ஒயின், பீர் இணைந்த காக்டெயில் பேமஸ், ஆனால் அது இந்தியாவில் இல்லை. நீர் சத்தும் கிடைக்கும். அதனால் முழு கிரேப் ஒயினான மும்தாஜ் ஒயின் க்வார்ட்டர் பாட்டில் வாங்கினால் சூப்பர் ஸ்ட்ராங் பீர் ஒன்று இலவசமாக தரவுள்ளோம். ஒயின் பாட்டில் ரூ.96 தான். அதற்கு ரூ. 102 மதிப்புள்ள ஸ்ட்ராங்க் பீர் இலவசமாக தரவுள்ளோம். காதலர் தினத்தன்று காலை 8 முதல் இரவு 11 வரை இந்த ஆபர் தரவுள்ளோம். அதுமட்டுமில்லாமல் ஒரு புல் பாட்டில் மும்தாஸ் ஒயின் வாங்கினால் நான்கு ஸ்ட்ராங் பீர் இலவசமாக கிடைக்கும். பிராந்தி விஸ்கியை விட இந்த காம்பினேஷன் டிரிங் நல்லா இருக்கும். இதுதான் லவ்வர்ஸ் டேவுக்கு நாங்க வாடிக்கையாளருக்கு தரும் பிராப்பர் ஆபர் என்கின்றனர்.